பள்ளிகள் திறப்பு தேதி குறித்து முக்கிய அறிவிப்பு?

பள்ளிகள் திறப்பு தேதி குறித்து முக்கிய அறிவிப்பு?

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அனைத்து பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்த கல்வியாண்டின் பள்ளிகள் திறப்பு தேதியை தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனால்கடந்த ஐந்து மாதங்களாக கல்வி நிலையங்கள் அனைத்தும் முடப்பட்டிருக்கின்றது.
பள்ளிகளின் திறப்பு தேதியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி அறிக்கை ஒன்றை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ளவாறு பள்ளிகள் நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளதால் பள்ளி வளாகங்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்படவேண்டும். கழிவறைகளை சுத்தம் செய்யப்பட்டு தூய்மையான கழிவறை வசதிக்கும்,மற்றும் தூய்மையான குடிநீர் வசதிக்கு வழிசெய்யுமாறு அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது என்றும், விரைவில்பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்படும் என்றும் அந்த சுற்றறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

வருகின்ற செப்டம்பர் அக்டோபர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த சுற்றறிக்கை தற்போது மாணவர்களிடையே இன்னும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயர்நீதிமன்ற மூத்த செய்தியாளர் காலமானார்?

உயர்நீதிமன்ற மூத்த செய்தியாளர் காலமானார்?

சென்னை உயர்நீதிமன்ற மூத்த செய்தியாளரான பணியாற்றிவந்தவர் பி.எஸ்.எல்.பிரசாத் (வயது65). இவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்காக சென்னை உயர்நீதிமன்ற செய்தியாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று இரவு அவரது இல்லத்தில் காலமானார்.இவர் இறப்பு செய்தியை கேட்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளும் மற்ற செய்தியாளர்களும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.ஊரடங்கு காலமென்பதால் குறிப்பிட்ட கால இடைவெளியில் சென்று அவரது உடலுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் செய்தியாளர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இவரின் உடல் இன்று மதியம் 3 மணியளவில் ஆவடியில் உள்ள மின் மயானத்தில் அடக்கம் செய்யப் படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

2000 ரூபாய் பணத்துக்காக தாயே அடித்துக்கொன்ற மகன்கள்?

2000 ரூபாய் பணத்துக்காக தாயே அடித்துக்கொன்ற மகன்கள்?

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேசன் சரோஜா என்னும் தம்பதிக்கு விக்னேஷ் (வயது 27) அருண்குமார் (வயது 23) என்னும் இரண்டு மகன்கள் உள்ளனர்.இவர்களின் தந்தை கணேஷ் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.தந்தை இறந்த பிறகு தாயுடன் குடிபோதைக்கு அடிமையான இரண்டு மகன்களும் வாழ்ந்து வந்தனர்.இந்நிலையில் நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த இரண்டு மகன்களும் வீட்டில் வைத்திருந்த 2000 ரூபாய் பணத்தை தேடி உள்ளனர்.தேடி பணம் கிடைக்காததால் தன் தாயிடம் கேட்டபொழுது வீட்டு செலவிற்காக அதை தான் எடுத்து செலவு செய்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும் தாயை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது தாயை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது போல் எடுத்துச்சென்றுள்ளனர்.
பின்னர் இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.விரைந்து வந்த காவல்துறையினர் சூரம்பட்டிவலசு சுடுகாட்டில் இந்த இரண்டு நபர்களும் இருப்பதாக தகவல் வந்தது.சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு சென்று பார்த்த பொழுது தாய் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லும் வழியிலேயே இறந்து விட்டதால் யாருக்கும் தெரியாமல் புதைத்து விட வேண்டும் என்று அந்த சுடுகாட்டில் தாயை புதைத்து உள்ளனர்.பின்பு போலீசார் அடக்கம் செய்த தாயின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து ஈரோடு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்தகுடிபோதை மகன்களை போலீசார் கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சையளிக்க ரூ.2500 கட்டணம் வசூலிக்கப்படும்:?தமிழக அரசு உத்தரவு?

கொரோனா சிகிச்சையளிக்க ரூ.2500 கட்டணம் வசூலிக்கப்படும்:?தமிழக அரசு உத்தரவு?

கொரோனா சிகிச்சையளிக்க
2500 கட்டணம் வசூலிக்கப்படும்:?தமிழக அரசு உத்தரவு?

தமிழ்நாட்டில் சென்னையை பொருத்தவரையில் சில மாதங்களாக தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது.அதிலும் கடந்த வாரம் மட்டும் தினசரி 6000 பேருக்கு தொற்று உறுதிச் செய்யப்பட்டு வந்தது.இதனால் தற்போது மரணங்களின் எண்ணிக்கையையும் கணிசமாக அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.கடந்த இரண்டு நாட்களாக தினசரி தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 100 க்கும் அதிகமாக இருக்கிறது.ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை தமிழகத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 68 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இதில் 55152 பேர் சிகிச்சை பெற்றும்,2 லட்சத்து எட்டாயிரம் பேர் குணமடைந்தும் வீடு திரும்பியுள்ளனர் என்று ஆய்வு அறிக்கை கூறுகின்றது.தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் இதுவரை சுமார் 4349 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

55152இவர்களில் 50 சதவீதத்துக்கும் மேலானோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.வீட்டு தனிமையில் (ஹவுஸ் கோரன்டைன்)
இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் “கோவிட் – 19 வீட்டு பராமரிப்பு திட்டம்”எனும் புதிய திட்டத்தை தமிழக அரசு விரைவில் அமல்படுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டு தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க 20 பேர் கொண்ட மருத்துவ குழு சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர்.இந்தக் குழுவில் மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் யோகா மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள், உள்ளிட்ட குழுக்களாக செயல்படுவர்.மேலும் இந்த 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு முழு மருத்துவ உதவிகளையும் வீடு சென்று வழங்குவார்கள்.

மேலும் அவர்களுக்கு ஒரு கண்காணிப்பு மருத்துவப் பெட்டகம் வழங்கப்படும் அதில் விட்டமின் மாத்திரைகள், முகக் கவசங்கள்,ஆக்சி மீட்டர் கருவிகள்,தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்டவை அந்தப் பெட்டிக்குள் இருக்கும்.மருந்துச் சீட்டுகள் ஆன்லைன் மூலமும் மருத்துவ ஆலோசனைகள் காணொலி காட்சி மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.இத்துடன் கூடவே யோகா பயிற்சியும் வழங்கப்படும் இத்திட்டத்தின்கீழ் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பர்.அப்பொழுது அவசர உதவி ஏதேனும் தேவைப்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதிகளும் செய்து தரப்படும்.

இவ்வளவு வசதிகள் உள்ளடக்கிய இந்த திட்டத்தில் சேர்வோர்களுக்கு கட்டணம் வசூலிக்க அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இதில் ஒரு கண்டிஷன் என்னவென்றால் ஆர்டிபிசிஆர் சோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டு விட்டு தனிமையில் இருக்க தகுதி உடையவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ள முடியும்.இந்த திட்டத்தில் சேருபவர்களுக்கு 14 நாட்கள் சிகிச்சை தொகுப்பிற்காக ரூ 2500 வசூலிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு சார்பில் கூறப்படுகின்றது.இந்தத் திட்டத்தில் சேர முன் வருபவர்களுக்கு மட்டுமே 2500 ரூபாய் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.