சாத்தான்குளம் ஏடிஎஸ்பி டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்?வழக்கு சிபிஐயிடம்ஒப்படைப்பு

சாத்தான்குளத்தில் மரம் மற்றும் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறைனரால் கைது செய்யப்பட்டு பாலியல் சித்ரவதை படுத்தி கொல்லப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனையடுத்துஇந்த வழக்கை சிபிஐ இடம் ஒப்படைக்குமாறு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேற்று முன்தினம் அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு உறுதுணையாக இருந்த தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் குமார், சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் காவலர் மகாராஜன் என்பவர் நீதிபதியை தரக்குறைவாக பேசியதால் அவர் மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ள டிஎஸ்பி மற்றும் எடிஎஸ்பி ஆகிய இருவரும் மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.