ஆணுறுப்பு வழியாக உடலில் நுழைந்து ரத்தத்தை உறிஞ்சி அசுரவேகத்தில் வளர்ந்த அட்டைப்பூச்சி..!

கம்போடியா நாட்டில் புனோம் பென்னி தலைநகரில் வசிக்கும் முதியவர் ஒருவர் தனது வீட்டிற்கு அருகே இருந்த குளத்தில் ஆடையின்றி நீந்தி குளித்துள்ளார். குளித்து முடித்து பார்த்தப் பின்னர் அவர் ஆணுறுப்பு காயமடைந்து ரத்தம் வந்துள்ளது. ஏதேனும், பூச்சி கடித்திருக்கும் என்று நினைத்து முதியவர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

மருத்துவர்கள் அந்த நபரை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் அவருக்கு தொடர்ந்து அவரது ஆணுறுப்பில் வலி இருந்துள்ளது. இதையடுத்து என்வென்று அறிய மருத்துவர்கள் சிறிய கேமிரா வழியாக சிறுநீர்ப்பையை சோதனை செய்தனர்.

கேமராவின் மூலம் அட்டை பூச்சி ஒன்று அவரது உடலுக்குள் புகுந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நிபுணர்கள்,மேலும் அந்த அட்டை பூச்சி அவரது ரத்தத்தை உறிஞ்சி பெரிதாகி வருவதும் உடலின் மற்ற பாகங்களையும் அந்த அட்டை பூச்சி சேதப்படுத்த ஆரம்பித்துள்ளதையும் கண்டறிந்தனர்.அந்த அட்டைப்பூச்சி அவரது உடம்பிலிருந்து 500ml க்கு அதிகமான ரத்தத்தை உறிஞ்சி அசுர வேகத்தில் வளர்ந்து இருந்ததினால் அதனை வெளியேற்ற மருத்துவர்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.

அட்டைப் பூச்சியை வெளியே எடுத்த பின்னர் ஒரு நாள் முழுவதும் முதியவர் மருத்துவ கண்காணிப்பில் வைத்துப் பின் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கம்போடியாவில் நடந்த இந்தச் சம்பவம் ஆச்சர்யமாகவும் மிகுந்த சவாலாகவும் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.