நெய்வேலி அனல்மின் நிலையத்தின் பாய்லர் வெடித்து 4 பேர் பலி!

தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்டத்தின் நெய்வேலியில் அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது.மேலும் இந்த அனல்மின் நிலையத்தில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.இங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது வழக்கமாக மாறியுள்ளது.

இன்று நெய்வேலி அனல்மின் நிலையம் இரண்டில் திடீரென பாய்லர் வெடித்ததால் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த அனல்மின் நிலையத்தில் இன்று 300 க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் நெய்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.இதில் சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.

தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதே இது போன்ற விபத்துக்கள் அரங்கேற காரணமாக உள்ளது என்று பலரும் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.