நடிகர் விமல் மற்றும் சூரி மீது வழக்கு பதிவு!

அண்மையில் நடிகர் விமல் மற்றும் சூரி கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரியில் மீன் பிடித்து கொண்டு இருப்பது போன்ற படங்கள் இணையத்தில் தீவிரமாக பரவியது.

இது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது தடைசெய்யப்பட்ட பகுதியான பேரிஜம் ஏரியில் இவர்களுக்கு மட்டும் எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.
ஊடரங்கு காலத்தில் இவர்கள் எவ்வாறு அங்கு சென்றார்கள் ,இ- பாஸ் எடுத்து சென்றார்களா என என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தனர்.

இதனை அடுத்து கோட்டாச்சியர் சிவக்குமார் நடத்திய விசாரணையில் அவர்கள் இ-பாஸ் பெறாமல் தான் சென்றுள்ளார்கள் என்பது தெரிய வந்தது அதனை அடுத்து உடனடியாக அவர்களுக்கு உதவி செய்தாக கூறு வனத்துறையில் 3 வேட்டை தடுப்பு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் அதன் பின் 2 வ‌ன‌க்காவ‌ல‌ர்கள், 1 வ‌ன‌க்காப்பாள‌ர் ப‌ணியிட‌மாற்றம் செய்ய‌ப்ப‌ட்டனர்.

அதன் பின் ந‌டிக‌ர்க‌ள் விமல் ம‌ற்றும் சூரி மீது,கோட்டாட்சிய‌ர் சிவ‌க்குமார் பேரிட‌ர் மேலாண்மை ச‌ட்ட‌த்தின் கீழ் வ‌ழ‌க்கு ப‌திவு செய்ய‌, காவ‌ல் துணை க‌ண்காணிப்பாள‌ர் ஆத்ம‌நாத‌னுக்கு ப‌ரிந்துரை க‌டித‌ம் அனுப்பி இருந்தார் இதுகுறித்து விரைவில் விசாரிப்பதாக டிஎஸ்பி ஆத்மநாதன் கூறி இருந்தார்.

இந்நிலையில் இன்று, ஊரடங்கு உத்தரவை மீறி,இ-பாஸ் பெறாமல் கொடைக்கானல் பயணம் செய்து கொரனோ தொற்று பரவ காரணமாக இருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது