இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனாக்கான கோவாக்சின் தடுப்பு மருந்து மனிதர்ளிடம் சோதிக்க அனுமதி!!!

ஜனவரி மாதம் தொடக்கத்திலிருந்தே கொரோனா வைரஸ் எனும் கொடிய வைரஸ் உலக நாடுகளை உழுக்கி வருகிறது. இதற்கானத் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க 200க்கும் மேற்பட்ட நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த பயோடெக் நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் தொடக்க வெற்றியை தொட்டிருக்கிறது.புனேவில் உள்ள ஐசிஎம் ஆர் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து பயோடெக் என்ற நிறுவனம் “கோவாக்சின்” என்னும் மருந்தை கண்டுபிடித்து.

பயோடெக் என்னும் நிறுவனம் கண்டுபிடித்த இந்த மருந்தை விலங்குகளிடம் சோதனை நடத்தி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.
இதையடுத்து மனிதர்களுக்கு இந்த மருந்தை சோதிக்க இந்திய மருத்துவ கட்டமைப்பானது அனுமதி அளித்துள்ளது. ஜூலை மாத இறுதிக்குள் 2 கட்ட சோதனைகளும் நாடு முழுவதும் நடத்தி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐதாராபத்தை சேர்ந்த இந்த பயோடெக் நிறுவனம் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.