தெரியாமல் கூட இந்த தவறை செய்து விடாதீர்கள் உங்கள் வீட்டில் உள்ள லட்சுமி கடாட்சம் போய்விடும்!!

இரு வாசல் படி வைத்திருப்பவர்கள் காலை எழுந்தவுடன் முன் கதவை திறந்த பின்னர் கொல்லைப்புற கதவை திறக்கக் கூடாது.அவ்வாறு செய்தால் வீட்டிற்கு வரும் லட்சுமி முன் வாசல் வழியே வந்து பின் வாசல் வழியே சென்று விடுவாள்.எப்பொழுதும் அதிகாலையில் கொல்லைப்புற கதவை திறந்த பின்னரே முன்வாயில் படித்திருக்க வேண்டும்.

சீராக நமக்கு கொடுத்த சிலவற்றை நம் பிள்ளைகளுக்கு கூட கொடுக்க கூடாது அவ்வாறு கொடுத்தால் நம் வீட்டில் உள்ள லட்சுமி போய்விடுவாள் என்று கூறுவர் அந்த வகையில் வெள்ளி பொருட்கள் லட்சுமி கடாட்சம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது அதனை நாம் தானமாக கொடுத்தால் நம் வீட்டில் உள்ள லட்சுமி போய்விடுவாள்.

லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க சில எளிய வழிமுறைகள்?

எப்பொழுதும் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க செவ்வாய் ,வெள்ளிக்கிழமை நாள் அன்று ஐந்து முகம் கொண்ட குத்துவிளக்கில் சிறிது பூமாலை தொடுத்து சந்தனப்பொட்டு வைத்து விளக்கேற்றி இறைவனை வணங்கி வருகையில் லட்சுமி கடாட்சம் சுபிட்சமாக இருக்கும்.

வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு மஞ்சள் குங்குமத்தை கொடுத்தால் லட்சுமி கடாட்சம் பெருகுவதோடு பெண்களின் மாங்கல்ய பாக்கியமும் பெருகும்.