திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லையா?? இந்த விரதத்தை மேற்கொண்டு பாருங்கள்!!

இந்தக் காலத்தில் திருமணமான பெண்களுக்கு எளிதில் குழந்தை பாக்கியம் என்பது கிடைக்காத ஒன்றாகவே இருக்கிறது. தாய்மை என்பது மகாலட்சுமியின் வரம் என்று பெரியோர்கள் கூறுவர்.குழந்தை பாக்கியத்திற்கு உரித்தான மகாலட்சுமி தாயாருக்கு இந்த நாளில் விரதம் மேற்கொண்டு வந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும் என்று ஆன்மீக ரீதியாக நம்பப்படுகிறது.

குழந்தை பாக்கியம் வேண்டி மகாலட்சுமிக்கு விரதம் செய்யும் முறை?

மகாலட்சுமி கையில் குழந்தையை வைத்திருக்கும் உருவ படத்தை அதவாது சந்தான லட்சுமியை, வரலட்சுமி விரத நாளன்று விரதம் இருந்து வெறும் சாதத்தில் நெய் பருப்பிட்டு லட்சுமி அம்மாவுக்கு படைத்து பூஜை செய்தப்பின் காக்கைக்கு ஒரு உருண்டை சாதம் வைத்து காக்கையை பித்ருக்களாக எண்ணி வணங்கவும்.
மேலும் சந்தான லட்சுமி மூல மந்திரத்தால் அக்னி வழிபாடும் செய்யலாம். 108 தடவை ஓம் ஐம் ஸ்ரீம் க்லீம் சந்தான லட்சுமியே நம என்று ஜெபித்து விட்டு, வணங்கங்கலாம்..

அடுத்ததாக மாதவிலக்கு நாட்கள் வந்து முடிந்த பின்பு அடுத்த நாள் காலை தலைக் குளித்து விட்டு ஒரு மாங்கொத்தை (மா இலை)எடுத்துப் பெண் தலையை முன்றுமுறை சுற்றிவிட்டு அவரின் வீட்டு நடுவாசலில் புதைத்து விடவும்.பிறகு அன்று முதல் அடுத்த 3 நாட்களுக்குத் தலைக்கு குளித்தபிறகு, அகில் கட்டையை பொடி செய்து பால்சாம்பிராணி தூளுடன் கலந்து, தணலில் சிறிது சிறிதாகப் போட்டு, சளிக்கு ஆவி பிடிப்பது போன்று அதிலிருந்து வரும் புகையை உள்வாங்கிக் கொள்ளவும்.

இதனால் உடலில் உள்ள கெட்ட சக்திகள் மற்றும் கெட்ட நீர் வெளிவந்து மலட்டுத் தன்மை நீங்கிக் கர்ப்பம் தரித்து அழகான குழந்தை பிறக்கும் என்று புலிப்பாணி முனிவரின் சித்த ரகசியப் பாடல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளார்.