மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால் 13 பேர் பலி

ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானுக்கு அருகில் உள்ள தைரிஷ் சதுர்க்கம் என்ற பகுதியில் உள்ள மருத்துமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர்

முதற்கட்ட விசாரனையில் மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் டாங்கில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள்தெரிவிக்கின்றன.
மருத்துவமனையில் ஆக்சிஜன் டாங்குகள் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டிருப்பதால் அவை தொடரந்து வெடித்து சிதறியபடி இருக்கிறது.
தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பு மற்றும் தீயணைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வெடி விபத்து காரணமாக மருத்துவமனை முழுவதும் தீ கொளுந்து விட்டு எரிந்தது வருகிறது. இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 13 பேர் பலியானதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.