10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கிரேடு முறையில் தேர்ச்சி வழங்க கல்வித்துறை திட்டம்

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் இல்லாமல் கிரேடு முறையில் தேர்ச்சி வழங்க ஆலோசித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டனர்.

இதனால் மதிப்பெண் வழங்குவதற்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் 80 சதவீத மதிப்பெண்ணும்,வருகை அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்ணும் வழங்கலாம் என ஆலோசித்து வந்துள்ளனர்.

இருப்பினும் மதிப்பெண் வழங்குவதில் சிக்கல் இருப்பதால் மதிப்பெண் வழங்காமல் கிரேடு முறையில் வழங்கலாம் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.