59 சீன ஆண்ட்ராய்டு செயலிகளுக்கு மத்திய அரசு தடை

59 சீன ஆண்ட்ராய்டு செயலிகளுக்கு மத்திய அரசு தடை

India Banned China Apps-Dhina India Online Tamil News

இந்திய சீன எல்லைப் பிரச்சினைகள் தீவிரமாக போகும் நிலையில் சீனாவின் சில செயலிகளை நாம் பயன்படுத்துவதால் இந்தியாவின் தகவல்கள் கடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கடந்த 18ம் தேதி 59 ஆப்கள் ஆபத்தானவை என்றும் அந்த ஆப்பகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சைபர் கிரைம் கோரிக்கை விடுத்தது.

மேலும் இதனை தொடர்ந்து கடந்த 24 ஆம் தேதி சுமார் 40000 க்கும் மேற்பட்ட இணையவழி மறைமுக தாக்குதல் சீனாவின் செங்டு பகுதியிலிருந்து நடத்தப்பட்டது என்று மகாராஷ்ட்ரா சைபர் க்ரைம் போலீஸ் தகவல் வெளியிட்டனர்.

இதனைத்தொடர்ந்து ஒரு முக்கிய திருப்பமாக சைபர் கிரைம் ஆபத்தானவை என்று கூறிய 59 ஆண்ட்ராய்டு செயலிகளுக்கு மத்திய அரசு திடீர் தடை விதித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், கூறியுள்ளதவாறு “தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69 A பிரிவின் கீழ் தகவல் தொழில்நுட்பத்தின் (பொது மக்களால் தகவல்களை அணுகுவதைத் தடுப்பதற்கான நடைமுறை மற்றும் பாதுகாப்புகள்) விதிகள் 2009 மற்றும் அச்சுறுத்தல்களின் வெளிப்படும் தன்மையைக் கருத்தில் கொண்டு, 59 செயலிகளை தடை செய்ய முடிவு அரசு செய்துள்ளது.

அவை இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, மாநில பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கில் பாதிப்பை ஏற்படுத்தும் பாரபட்ச செயல்களில் ஈடுபட்டுள்ளன.” என கூறியுள்ளது.

அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட சீன செயலிகளின் முழு பட்டியல் விவரங்கள் பின்வருமாறு