1.10 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு ரேசன் பொருள்கள் !மத்திய அரசு திட்டம்.

பிரதமர் மோடி அறிவித்துள்ள திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 1.10 கோடி குடும்ப அட்டை தாரார்களுக்கு இலவசமாக ரேசன் பொருள்கள் வழங்கப்பட உள்ளன.

இது குறித்து உணவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது,
தமிழகத்தில் உள்ள 2 கோடியே 5 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களில் முன்னுரிமை உடைய குடும்ப அட்டைதாரர்கள் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர்.மேலும் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 20 லட்சத்துக்கும் மேலான குடும்ப அட்டைதாரா்களும் உள்ளனா்.மேலும் முன்னுரிமை இல்லாத அட்டை தாரர்களின் எண்ணிக்கை 95 லட்சத்துக்கும் அதிகமாகவே உள்ளனர்.

பிரதமர் மோடி அறிவித்துள்ள திட்டத்தின் கீழ் நவம்பர் மாதம் வரை 5 கிலோ அரிசி அல்லது கோதுமையுடன் பருப்பும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள். இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் 1 கோடியே 10 லட்சம் முன்னுரிமை உள்ள குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற உள்ளனர்.மேலும்  அன்ன யோஜனாவின் கீழ் வரக்கூடிய முன்னுரிமை குடும்ப அட்டைதாரா்களும் பயன்பெற உள்ளனா் என்று தெரிவித்துள்ளனர்.

மோடி அறிவிப்பை அடுத்து தமிழகத்திலும் அரிசி பெரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக அரிசி வழங்க தமிழக அரசும் அறிவிக்கும் என மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.