கிராமப்புறங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் வழிபட அனுமதி!பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்?

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஜூலை 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. எனவே தமிழகம் முழுவதும் உள்ள கிராம புற கோவில்கள் அனைத்திலும் வழிபாடுகள் தொடங்கியுள்ளனர்.இந்த கோவில்கள் ஆண்டு முழுவதும் ரூ.10,000 க்கு குறைவான வருமானத்தை உடைய கோவில்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது.

மசூதிகள்,தேவாலயங்களிலும் இன்று முதல் வழிபாடுகள் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டு தலங்களில் பின்பற்றப்பட வேண்டியவை:
முககவசம் அணிய வேண்டும்,சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் மேலும் கோவில்களின் தரைத்தளத்தை கிருமிநாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்ய வேண்டும் போன்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.மேலும் சுகாதார துறை மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள் இதை கவனிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இருப்பினும் நகர்புறங்களில் உள்ள கோவில்கள் ,மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் மக்கள் வழிபாடு செய்ய தடை நீடித்த வண்ணமே உள்ளது.