ஆபரணத்தங்கத்தின் விலை குறைவு! சென்னையில் சவரனுக்கு 36,880 ரூபாய்க்கு விற்பனை

ஆபரணத்தங்கத்தின் விலை குறைவு! சென்னையில் சவரனுக்கு 36,880 ரூபாய்க்கு விற்பனை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு 12 ரூபாய் குறைந்து ரூபாய் 4,610 க்கு விற்பனை செய்யப்படுகிறது மேலும் சவரனுக்கு ரூ.96 குறைந்து 36,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 5,290 க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும் வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 800 ரூபாய் அதிகரித்து 52,900 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 53.10 ரூபாயாக இருந்தது.

தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே வந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.இது நகையின் மீது ஆர்வம் கொண்ட இல்லத்தரசிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் நகை கடைகள் மூடப்பட்டுள்ளது இருப்பினும் தங்கத்தின் விலை கடந்த மார்ச் 24 முதல் தொடர்ந்து உயர்ந்து வருவது குறிபபிடத்தக்கது.