கொடுமணலில் 69 கல்பவள மணிகள் கண்டுபிடிப்பு!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள கொடுமணலில் நடந்த அகழ்வாராய்ச்சியில் பவலமணி உள்பட பல்வேறு பொருள்களை கண்டுபிடித்துள்ளனர்.

சென்னிமலை அருகே உள்ள நொய்யல் நதிக்கரை கிராமமான கொடுமணலில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழக தொல்லியல் துறையினர் 30 நாட்களாக நடத்திய அகழ்வாராய்வில் பல்வேறு வகையான சான்றுகள் ,சின்னங்கள் மற்றும் பொருள்கள் கிடைத்து வருகிறது.மேலும் பட்சை கற்கள்,பாசி மணிகள் கூட சில நாட்களுக்கு முன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தொல்லியல் துறையினர் கூறியதாவது, ஈமச் சின்னம் எனப்படும் கல்லறை பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது சடங்குகள் செய்வதற்காக 10 கிண்ணங்கள் ,5 மண் ஜாதிகள் ,41 இரும்பு வாள் மற்றும் மூன்று சிறிய கத்திகள் ஆகியவை கிடைத்துள்ளன.மேலும் ஒவ்வொரு கல்லறையிலும் வெவ்வேறு வகையான பொருள்கள் கிடைத்துள்ளன இதனால் வசதிக்கு ஏற்றவாறு சடங்குகள் செய்திருக்கலாம்.

இதனை அடுத்து தொழிற்சாலை இருந்த இடத்தில் அகழாய்வு மேற்கொண்டபோது அங்கு கறுப்பு, சிவப்பு நிறத்தில் ஒரு பானை, ஒரு வெள்ளி, நான்கு செம்பு நாணயங்கள், குஜராத் மாநில 69 கல்பவள மணிகள், கற்களை உடைக்கும் ஒரு கல் சுத்தியல், அணிகலன்கள் செய்வதற்கான சுடு மண்ணால் தயாரான ஒரு பானை மற்றும் உடைந்த ஓடுகள் கிடைத்துள்ளன. இந்த அகழாய்வு செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் என்று தொல்லியல் துறையினர் கூறியுள்ளனர்.