நடிகை விஜயலட்சுமி பிரண்ட்ஸ்,பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்தவர்.தற்போது சென்னை,திருவான்மியூரில் வசித்து வருகிறார்
நேற்று மாலை இரத்த அழுத்தத்தை குறைக்க கூடிய மாத்திரைகளை அதிக அளவு உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்த அவர், தற்போது சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த ஒரு வருடமாக,தன்னை திருமண செய்து கொள்ளவதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்ற குற்றச்சாட்டை வைத்து வருகிறார்.சீமானுடன் இருக்கும் புகைப்படங்ளை அண்மைகாலங்களில் வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்த குற்றச்சாட்டுகளை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் நடிகை விஜயலட்சுமி மீது தொடர்ந்து அநாகரிக முறையில் விமர்சனம் வைத்து வந்தனர்.
நேற்று முதல் நாள் ஹரி நாடார் தனது முகநூல் பக்கத்தில் தமிழ் திரைப்பட நடிகை விஜயலட்சுமி அவர்களே! பக்கத்தில் நாவை அடக்குங்கள் இல்லையேல் நாக்கை அறுத்து எறிய வேண்டி வரும்! நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் எனது இரத்தம் என்று பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் நடிகை தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் அதில் தான் தற்போது இரண்டு இரத்த அழுத்தைத்தை குறைக்க கூடிய மாத்திரிக்கைகளை உட்கொண்டு இருக்கேன்.இதுவே என்னுடைய கடைசி வீடியோ, நான் இனி யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன். சீமானும், சீமான் கட்சியினரும் கடந்த 4 மாதமாக கொடுத்த அழுத்தம் காரணமாக மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன்.
நேற்று முதல் நாள் ஹரி நாடார் பேசி ரொம்ப அசிங்கப்படுத்தியது, மீடியாவில் என்னை அசிங்கப் படுத்தியது போதும்.இதுக்குமேல் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.
சீமான்,ஹரிநாடார் நான் கன்னடத்தில் பிறந்ததால் சாதி பற்றி பேசுகிறார்கள்.சீமானுக்கு வாழ்க்கை பிச்சை போட்ட பிரபாகரனின் சாதிப்பொண்ணு நான்,வாழ்க்கை பிச்சை எடுக்கும் போது சீமானுக்கு எந்த சாதி என்று தெரியவில்லையா?
என் குடும்பத்தை விட்டுச் செல்கிறேன்
நான் அதிக நாட்கள் வாழ நினைத்தேன். ஆனால், என்னை வாழ விடவில்லை.
சீமானையும்,ஹரி நாடாரையும் விடாதிங்க, முன்ஜாமீன் எடுக்கவோ, தப்பிக்கவோ விடாதிங்க.இனி நான் உங்க மெம்மரில தான் இருப்பேன் என்று கூறியிருந்தார்.
இதுபற்றி தற்போது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றர்.மேலும் சென்னை எழுப்பூர் நீதிமன்ற நீதிபதி விஜயலட்சுமியிடம் வாக்கு மூலம் பெற்று சென்றுள்ளார்.