8 லட்சம் பயணிகளின் முன்பதிவு ரத்து! ரூ.44.5 கோடி திருப்பி அளித்துள்ளதாக தெற்கு ரயில்வே தகவல்

கொரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை ரயில் சேவையை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்நிலையில் பயணிகளின் முன்பதிவு ரத்து செய்யப்பட்டது. எனவே தெற்கு ரயில்வே பயணிகள் கடந்த மே 22 முதல் ஜூன் 28 வரை முன்பதிவு செய்ததற்கான கட்டணத்தொகையை திருப்பி அளித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் சேவையை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.எனவே பயணிகளின் கட்டண தொகையை முழுவதும் திருப்பி வழங்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்தது.

இது இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரி கூறியதாவது, கொரோனா பரவுவதை கருத்தில் கொண்டு ரயில் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள முன்பதிவு நிலையங்கள் ஜூன் 1 முதல் திறக்கப்பட்டது.

சென்னை சென்ட்ரல், எழும்பூா், திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், சேலம், கரூா், கோவை, மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல் போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் ரத்து செய்யப்பட்ட ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்டதற்கான பணம்
திருப்பி அளிக்கப்படுகின்றன.

மே 22 முதல் ஜூன் 28 தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட 8 லட்சம் பயணிகளுக்கான முன்பதிவு தொகை ரூ.44.5 கோடி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை ரயில்வே கோட்டம் கீழ் உள்ள ரயில்வே முன்பதிவு மையங்களில் ரத்து முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுக்காக, ரூ.12.83 கோடி பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை கோட்டம் சாா்பில், ரூ.4.39 கோடியும், சேலம் கோட்டம் சாா்பில் ரூ.6.62 கோடியும், திருச்சி கோட்டம் சாா்பில் ரூ.4.20 கோடியும் பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.