பிரதமரின் வறுமை ஒழிப்பு திட்டம் நவம்பர் மாத இறுதி வரை தொடரும்!!மோடி அறிவிப்பு?

கொரோனா தொற்று வீரியத்தின் காரணமாக நாடு முழுவதும் ஆறாம் கட்டமாக வருகின்ற ஜூலை 31-ஆம் தேதி வரை சில தளர்வுகள் உடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.இதுகுறித்து இன்று ஜூன் (30) மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களிடையே பேசினார்.

அவர் கூறியுள்ளவாறு:

இரண்டாம்கட்ட தளர்வுகளுக்குள் தேசம் நுழைவதால் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் இந்த நேரத்தில் சிறிய தவறுகள் பெரிய ஆபத்துகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் தனிமனித இடைவெளிகளை பின்பற்றி கவனத்துடன் பாதுகாப்பாக இருக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டார்.

மேலும் தற்போது சாதாரணமாகவே சளிக் காய்ச்சல் ஏற்படும் பருவம் நிலை மாற்றத்திற்கு நம் செல்வதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

ஏழை மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் அவர்கள் உணவின்றி தவிக்கும் நிலை தவிர்க்கப்பட்டது.மேலும் ஏழை மக்களின் வங்கி கணக்கில் 31 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதமர் மந்திரி வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

“தொடர்ந்து பேசிய அவர் பிரதமரின் வறுமை ஒழிப்பு திட்டம் நவம்பர் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்படும்” என்றும் நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் மூலம் புலம்பெயர் தொழிலாளிகள் பெரிதும் பலன்கள் அடைந்துள்ளனர் என்றும் கொரோனா தடுப்பு பணியில் சில மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்ட என்றும்

“விவசாயிகளுக்கும் வரி செலுத்துவோர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.